மூன்று நாட்கள் அல்ல ஒரு வாரம் எடுத்துக் கொள்ளுங்கள் எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த தயார்: முதல்வருக்கு ஆ.ராசா சவால்

சென்னை: உங்கள் அமைச்சரவையில் உள்ள அனைவரையும் கூப்பிடுங்கள், உங்கள் அட்வகேட் ஜெனரலை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் நானும் எடுத்து வருகிறேன். மூன்று நாட்களோ அல்லது ஒருவாரமோ எடுத்துக் கொள்ளுங்கள் கோட்டைக்கு கூப்பிடுங்கள் எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த தயார் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா நேற்று கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு குற்றச்சாட்டுகளிலும் திமுகவை சேர்ந்த தலைவர்கள் தண்டிக்கப்படவில்லை. முதல்வர் மூன்றாம் தரம் மனிதரை போல பேசுகிறார்.

இந்நிலையில் நான் அந்த குற்றச்சாட்டுக்கு மட்டுமல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள படியே ஆட்சி திறமையோ, நேர்மை திண்மையொ இருக்குமானால் 2ஜி உட்பட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது என்று சொல்வாரானால், சொல்வதற்கு மனவலிமை இருக்குமானால், இன்று அல்லது நாளை கோட்டையில் குறித்த நேரத்தில் ஆ.ராசா திமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியுடன் அனைத்து தொலைக்காட்சி முன்னிலையில் சர்காரியா, 2ஜி என்று குறிப்பிட்டு விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

அதிமுக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட கட்சி, அதிமுக ஊழல் கட்சியா? திமுக ஊழல் கட்சியா? என்பதை மனவலிமை இருந்தால் பகிரங்கமாக சவால் விடுகிறேன் மூன்று நாட்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் அமைச்சரவை அனைவரையும் கூப்பிடுங்கள், உங்கள் அட்வகேட் ஜெனரல் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் நானும் எடுத்து வருகிறேன். மூன்று நாட்களோ அல்லது ஒருவாரமோ எடுத்துக் கொள்ளுங்கள் கோட்டையில் கூப்பிடுங்கள் வருகிறேன் என்று முதல்வருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியில் இருந்து தங்களுடைய ஆதரவை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அரசியல் கலப்பற்ற ஒரு மிகப்பெரிய போராட்டம் வடஇந்தியாவில் மட்டுமல்ல தென் இந்தியாவில் இருக்கிற ஆந்திரா வரை வந்துவிட்டது. அந்த விவசாயிகளை ஆதரித்து திமுக தலைவர் அறிக்கை கொடுத்தால் அவருக்கு போதுமான புரிதல் இல்லை என்று கூறுகின்றனர். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.

Related Stories: