பொதுப்பிரிவினருக்கு 4ம் நாள் மருத்துவ கலந்தாய்வு

சென்னை: பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் நான்காவது நாளான நேற்று தரவரிசை எண் 1702 முதல் 2150 வரை உள்ள 450 பேர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. 436 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. 23ம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு தொடங்கியது. ஒரு நாள் மட்டுமே பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நிவர் புயல் காரணமாக கடந்த 29ம் தேதி வரை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், கடந்த 30ம் தேதி முதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் தரவரிசை எண் 1702 முதல் 2150 வரை உள்ள 450 பேர்களுக்கு நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு  தொடங்கிய கலந்தாய்வில் 14 பேர் வராததால் 436 பேர் கலந்துகொண்டனர். அரசு கல்லூரிகளில் 363 எம்.பி.பி.எஸ் இடங்களும், தனியார் கல்லூரிகளில் 51 எம்.பி.பி.எஸ் இடங்களும் என மொத்தம் 418 இடங்கள் நேற்றைய கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. 14 பேர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: