×

பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்; புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.!!!

சென்னை: புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு  வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று (3.12.2020) மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.  இப்புயல், (04-12-2020) அன்று அதிகாலையில் பாம்பன்- கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (04-12-2020) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதற்கு ஈடாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கூடிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : public ,holiday ,districts ,storm ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Avoid coming out in public; Public holiday for 6 districts in Tamil Nadu tomorrow due to Purevi storm: Government of Tamil Nadu announces. !!!
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...