ஜனவரியில் கட்சி தொடங்குகிறேன்: மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல: ரஜினி ட்வீட்

* #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல டிரண்ட் ஆகும் ஹேஷ்டேக்

* அற்புதம், அதிசயம் நிகழும் என ட்வீட்டரில் பதிவு

சென்னை: ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பரில் 31-ல் தேதி அறிவிப்பதாக ரஜினி ட்விட்ரில் பதிவிட்டுள்ளார். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் ரஜினி பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்றி, ஜாதி மதச்சார்பற்ற ஆண்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அற்புதம், அதிசயம் நிகழும் என டிவிட்டரில் நடிகர் ரஜினிகாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிராண்டாகி வருகின்றனர். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என கடந்த மார்ச் மாதம் ரஜினி அறிவித்திருந்தார். தான் முதல்வராக விரும்பவில்லை என 2017-ம் ஆண்டிலேயே கூறிவிட்டேன் என்றும் நினைவுகூர்ந்திருத்தார்.

அரசியல் வாய்ஸ் மட்டுமே கொடுத்து வந்த ரஜினி தற்போது களத்தில் இறங்குகிறார்:

கடந்த 30-ம் தேதி மாவட்டச் செயலாளருடன் கோடம்பாக்கம் ராகேவேந்திரா திருமண மண்டபத்தில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா என்றிருந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சுமார் 28 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருப்புக்கு ரஜினி விடை தந்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழகத்தில் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: