புரெவி புயல் முன்னெச்சரிக்கை: இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் மலை சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை: சார் ஆட்சியர் உத்தரவு

திண்டுக்கல்: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலை சாலைகளில் இன்று மாலை 7 மணியில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இலங்கை இலங்கையின் திருகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கத் தொடங்கியது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்தது.

மேலும் புரெவி புயல் பாம்பனுக்கும கிழக்குப்பகுதியில் 80 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் தற்போது பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. எனவே கொடைக்கானலின் நேற்று முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள், போக்குவரத்து மலை சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரெவி புயல் பாம்பன் அருகே கரையை கடக்கும் போது காற்றின் தாக்கும் அதிகமாக காணப்படும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

Related Stories:

>