இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் டாப் -10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: 2-வது இடத்தை கைப்பற்றியது சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம்

டெல்லி: இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் டாப் -10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. தமிழகத்தில் சேலம் சூரமங்கலம் காவல்நிலையம் 2ம் இடம் பிடித்துள்ளது. நாட்டின் 2-வது காவல் நிலையமாக சேலத்தில் உள்ள சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 20 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் சிறந்த காவல் நிலையமாக சூரமங்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர்களுக்கு எதிரான பிரச்சனை, சொத்து பிரச்சனைகளை கையாண்டதில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டுகளை பெற்றுள்ளது.

மதி்திய அரசு அறிவித்த டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல்:

1. மணிப்பூர் தௌபல் - நோங்போக்செக்மை காவல்நிலையம்

2. தமிழ்நாடு - சேலம் மாநகர் - சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம்

3. அருணாசலம் - சாங்லங் - கர்சங் காவல்நிலையம்

4. சட்டீஸ்கர் - சூரஜ்புர் - ஜில்மிலி காவல்நிலையம்

5. கோவா - தெற்கு கோவா - செங்குயெம் காவல்நிலையம்

6. அந்தமான் - நிகோவார் தீவுகள் - வடக்கு மற்றும் மத்திய அந்தமான் - காலிகட் காவல்நிலையம்

7. சிக்கிம் - கிழக்கு மாவட்டம் பாக்யோங் காவல்நிலையம்

8. உத்தரப்பிரதேசம் - மொராதாபாத் - காந்த் காவல்நிலையம்

9. தாத்ரா மற்றும் நாகர் ஹேவேலி - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி - கான்வெல்

10. தெலங்கானா கரீம்நகர் - ஜம்மிகுண்டா நகரம் காவல்நிலையம்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது. அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில், தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம் 4-ஆவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த காவல் நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு முறை தேனி மாவட்ட காவல்துறைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையம், சிறந்த காவல் நிலைய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Related Stories: