×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் பாதிப்பு; 526 பேர் உயிரிழப்பு: 40,726 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.38 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 95.34 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 35,551 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95,34,964 ஆக உயர்ந்தது.

* புதிதாக 526 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,648 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,726 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால், குணமடைதோர் எண்ணிக்கை 89,73,373 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,22,943 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 94.11% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.44% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,11,698 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 14,35,57,647 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : fatalities ,India , In India, within 24 hours, corona, death, discharge
× RELATED பாரிமுனையில் விபத்து – இருவர் உயிரிழப்பு