×

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு; 4.50 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்தை நெருங்கியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கபட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்தை நெருங்கியுள்ளது.

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 62 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 48 லட்சத்து 1 ஆயிரத்து 373 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 4 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 92 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 48 லட்சத்து 99 ஆயிரத்து 56 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Corona , Corona increasing day by day; Worldwide vulnerability rises to 6.48 crore; 4.50 crore people recovered and discharged
× RELATED அமைச்சர் காமராஜுக்கு கொரோனா பாதிப்பு: தனியார் மருத்துவமனையில் அனுமதி