×

யோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் அவசரம் காட்டுவது ஏன்? மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் கேள்வி

மைசூரு: மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் முதல்வர் அவசரம் காட்டுவது ஏன்? நாங்கள் யாரை விரோதம் செய்தோமோ அவரே தற்போது முதல்வருக்கு நண்பராகவுள்ளார் என்று எச். விஷ்வநாத் கேள்வி எழுப்பினார். மைசூருவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாம்பே டீமில் நான் தனிமையில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதேபோல், எனக்கு ஆதரவாக இருப்பதாக பா.ஜ. மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நான் தனிமையில் இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். உயர் நீதிமன்ற தீர்ப்பின் அறிக்கையை நான் பார்த்துளேன். ஆனால் அதன் உத்தரவு நகல் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் அமைச்சராகும் தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2027-ம் ஆண்டு வரை மேலவை உறுப்பினர் பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் எடியூரப்பா ஏன் அவசரம் காட்டி வருகிறார் என்று தெரியவில்லை. அவர் பா.ஜ. அரசு அமைவதற்கு காரணமாக இருந்தாரா, எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து வந்தாரா என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினார். யோகேஷ்வர் கையில் சூட்கேஸ் பிடித்துக்கொண்டு மும்பை, புனே என்று சுற்றி திரிந்தவர். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க அவசரம் காட்டுவது சரியான முடிவு கிடையாது.
மாநிலத்தில் பா.ஜ. அரசு அமைக்க யோகேஷ்வரின் பங்களிப்பு எதுவும் கிடையாது. அது போன்றவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதில் பசவணகவுடாபாட்டீல் எத்னால், உமேஷ்கத்தி ஆகியோருக்கு வழங்க வேண்டும். யோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படும். நாங்கள் யாரை விரோதம் செய்தோமோ அவரே தற்போது முதல்வருக்கு நண்பராகவுள்ளார். தற்போது எடியூரப்பாவின் நடவடிக்கைள் வேறு மாதிரியாகவுள்ளது என்றார். பா.ஜ. அரசு அமைவதற்கு காரணமாக இருந்தாரா, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து வந்தாரா என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினார்.

Tags : Chief Minister ,H. Vishwanath ,Yogeshwar ,Upper House , Why is the Chief Minister in a hurry to give a ministerial post to Yogeshwar? Question by Upper House Member H. Vishwanath
× RELATED மகாராஷ்டிரா, பீகார் பாணி அரசியல்...