ஜி.டி.தேவகவுடா மஜதவில் நீடித்து வருகிறார்: மாஜி முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

மைசூரு: எம்.எல்.ஏ. ஜி.டி.தேவகவுடா மஜதவில் தொடர்ந்து நீடித்து வருகிறார் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். முன்னாள் அமைச்சரும், சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏவுமான ஜி.டி.தேவகவுடா சில அரசு விழாக்களில் பாஜ அமைச்சர்களுடன் கலந்து கொண்டார். இதை வைத்து அவர் மஜதவில் இருந்து விலகிவிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜி,டி.தேவகவுடா மஜதவில் தொடர்ந்து நீடித்து வருகிறார் என்று மாஜி முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

மைசூருவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: அரசு நிகழ்ச்சிகளில் பா.ஜ. அமைச்சர்களுடன் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று. இதற்கு வேறுமாதிரியான அர்த்தங்கள் கண்டுப்பிடிக்க தேவையில்லை. வரும் கிராம பஞ்சாயத்து தேர்தல் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவகவுடா தலைமையில் எதிர்கொள்ளப்படும். அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருக்கும் வரை மஜதவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். லவ்ஜிஹாத்தை விட மாநிலத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் உள்ளது. அது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராம பஞ்சாயத்து தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.வினர் கிராம சுய ராஜ்ஜியம் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது மக்களிடம் எடுபடாது.

கிராம பஞ்சாயத்து தேர்தல் என்பது கட்சி சார்ந்த தேர்தல் கிடையாது. ஒரே கட்சியில் இரண்டு, மூன்று பேர் போட்டியிடுவார்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நேரடியாக மோதிக்கொண்ட சம்பவத்தை பார்த்துள்ளேன். உள்ளூர் பிரச்னை அடிப்படையில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும். இதனால் கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணிகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். கிராம பஞ்சாயத்து தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.வினர் கிராம சுய ராஜ்ஜியம் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இது மக்களிடம் எடுபடாது.

Related Stories: