போதை பொருள் கடத்தல் மேலும் 2 பேர் கைது

பெங்களூரு:  பெங்களூருவில் வெளிப்படையாக போதை பொருளை கடத்த முடியவில்லை என்றதும், சாமி போட்டோக்கள் மற்றும் பிற பொருட்கள் வாயிலாக மறைத்து வைத்து போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதன்படி சமீபத்தில் சாம்ராஜ்பேட்டை கூரியர் மையத்திற்கு வந்த சாமி போட்டோக்களை ஆய்வு செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் மறைத்து வைத்து கடத்தியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருந்தனர். விசாரணையில் அவர்கள் “டார்க் வெப்” வாயிலாக வெளி நாடுகளில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இவர்களுடன் மேலும் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்களை சி.சி.பி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் பனசங்கரியை சேர்ந்த ராகுல் (26)மற்றும் தர்ஷன் (22)ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சாமி புகைப்படங்களை கைப்பற்றிய போலீசார் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 1000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டார்க் வெப் மூலம் போதை பொருட்களை வரவழைத்து, பெங்களூருவில் உள்ள நண்பர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், வசதிப்படைத்த வீட்டை சேர்ந்த இளைஞர்கள் ஆகியோருக்கு சப்ளை செய்திருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேர் மீதும் சி.சி.பி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: