×

டெல்லி பா.ஜ நிர்வாகிகளுடன் ஜேபி நட்டா 2 நாள் ஆலோசனை

புதுடெல்லி: கட்சியின் ‘பாரத் பர்வஸ்’ திட்டத்தில், டெல்லி மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பாஜ தேசிய தலைவர் ஜே பி நட்டா 2 நாட்கள் நேர்காணல் நடத்தி ஆலோசிக்க உள்ளார். கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடனும், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஊக்குவிக்கும் அடிப்படையிலும் நாடு முழுவதும் பாஜ தேசிய தலைவர் ஜே பி நட்டா டூர் புறப்பட்டு உள்ளார். டெல்லி மாநில நிர்வாகிகளையும், பூத் லெவல் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களையும் வரும் 23, 24ம் தேதிகளில் நட்டா சந்திக்கிறார் என மாநில பாஜ ஊடகப்பிரிவு தலைவர் நவீன் குமார் தெரிவித்து உள்ளார்.

கட்சி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மட்டுமன்றி, 2022ல் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கு வியூகம் வகுத்தல், குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுவது, டெல்லி அரசின் செயல்பாடுகள், ஆம் ஆத்மி கட்சிக்கு எப்படி இக்கட்டு அளிப்பது, மாநகராட்சியின் கடந்த தேர்தலில் சறுக்கிய வார்டுகளுக்கு காரணம் என பல்வேறு விஷயங்கள் குறித்து நட்டா தீவிர ஆலோசனை நடத்தியும், பரிந்துரைகள் வழங்கவும் உள்ளார் என குமார் கூறியுள்ளார்.
வார்டு மட்ட கட்சி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் அவர் நேர்காணல் நடத்தி ஆலோசிப்பார் என்றும், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாநில தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்களுடன் நேரில் தீவிர ஆலோசனை நடைபெறும் எனவும் கூடுதல் தகவலை குமார் தெரிவித்தார்.

Tags : JP ,consultation ,BJP ,Delhi ,executives , JP Natta 2 day consultation with BJP executives in Delhi
× RELATED பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு