×

புடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்

மாஸ்கோ: அமெரிக்காவின் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அனுமதி அளித்துள்ள நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை டாக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செலுத்தும் பணியை அடுத்த வாரத்தில் தொடங்க அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷ்யா கண்டுபிடித்த ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசியை அந்நாடு அங்கீகரித்தது. ஆனால் வெகுசீக்கிரத்தில் ரஷ்யா இம்மருந்தை அங்கீகரித்ததால், முறையான அனைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டதா என்பது  குறித்து உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலகில் முதல் நாடாக இங்கிலாந்து அரசு, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்படுத்திற்கு வழங்க நேற்று அனுமதி தந்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், ஸ்புட்னிக் தடுப்பூசியை டாக்டர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கும் பணியை அடுத்த வாரத்திலிருந்து தொடங்க ரஷ்ய அதிபர் புடின் நேற்று உத்தரவிட்டுள்ளார். பரிசோனை முடிவுகள் வெளியாகும் முன்பே புடினின் இந்த அறிவிப்பு விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவதை போன்றது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும், ரஷ்யாவில் பல உயர் அதிகாரிகள் உட்பட சுமார் 1 லட்சம் பேர் ஸ்புட்னிக் மருந்தை போட்டுக் கொண்டுள்ளனர்.


Tags : administration ,Putin ,Sputnik , Speed up Putin's administration of the Sputnik vaccine
× RELATED கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு...