×

மார்க்சிஸ்ட் கட்சியின் பேரவைக்கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  கூட்டத்தில் ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்ட குழுவை இரண்டாகப் பிரிப்பது என கட்சியின் மாநிலக் குழு முடிவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைநகர் டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்  போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 4 முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : Assembly ,Marxist Party , Assembly of the Marxist Party
× RELATED சட்டமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்