×

கொரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய  மாவட்டத்தின் கலெக்டராக  ஜான்லூயிஸ்   பதவியேற்று  திறம்பட பணியாற்றி வந்தார் . இவர் கடந்த மாதம் நவம்பர் 8ம்தேதி   திருக்கழுக்குன்றம் அருகே உள்ள இரும்புலிச்சேரி கிராம மேம்பால  பணிகளை ஆய்வு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.  வீடு திரும்பிய அவருக்கு உடல்நலக்குறைவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் கலெக்டர் ஜான்லூயிசுக்கு   கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.   பின்பு சென்னை  கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்டியூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .25நாட்கள் சிகிச்சைக்கு பின்பு குணமாகி விடுதிரும்பினார். நேற்று முதல் கலெக்டர்  தனது அலுவல் பணியில் ஈடுபட்டார். கொரானா சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.Tags : collector , Officials congratulate the collector who returned to work after completing corona treatment
× RELATED வருவாய்த்துறையினரை கண்டித்து...