×

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசார நிகழ்ச்சி

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பேரூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் கோயில் வளாகத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திமுக கொள்கைப்  பரப்பு செயலாளர் சபாபதி மோகன் ஸ்ரீ ராமானுஜர் கோயில் அர்ச்சகர்களிடம் கலந்துரையாடினார். பிச்சுவாக்கம் பகுதியில் உள்ள 100 நாள் வேலை திட்ட ஊழியர்களிடம் குறைகள் கேட்டார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்  தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் மேவளூர்குப்பம் கோபால், கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் மோகனன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், பொடவூர் ரவி, சிவபாதம், வளர்புரம் ஜார்ஜ், ஒன்றிய  அமைப்பாளர்கள் குண்ணம் ராமமூர்த்தி, சோகண்டி பாலா, மண்ணூர் சரவணன், போஸ்கோ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Stalin , Stalin's Voice Propaganda Towards Dawn
× RELATED மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு செங்குட்டுவன் எம்எல்ஏ அறிக்கை