×

உலகில் முதல் முறையாக ஆட்டை வெட்டாமலே இறைச்சி சாப்பிடலாம்: சிங்கப்பூர் அரசு அனுமதி


சிங்கப்பூர்: இறைச்சிக்காக உலகெங்கிலும் தினமும் ஏராளமான கோழி, ஆடுகள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையில், கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களிலேயே ஆட்டிறைச்சி, கோழி இறைக்கி, மாட்டிறைச்சியை தயாரிக்க  சிங்கப்பூர்  அரசு முடிவெடுத்துள்ளது.விலங்குகளின் உடல் திசுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட செல்களை பயன்படுத்தி ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான உற்பத்தி செலவானது மிகவும் அதிகமாகும். உலகிலேயே  முதல்முறையாக ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்வதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஈஸ்ட் ஜஸ்ட் என்ற நிறுவனம் ஆய்வக இறைச்சியை விற்பதற்கான சிங்கப்பூர் அரசின்  அனுமதியை பெற்றுள்ளது.  

இது தொடர்பாக ஈஸ்ட் ஜஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஷ் டெட்ரிக் கூறுகையில், “விலங்குகளில் உயிரணுக்களில் இருந்து, நேரடியாக உண்மையான மற்றும் உயர்தர மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பான இறைச்சி  உருவாக்கப்படுகின்றது. இந்த இறைச்சி துண்டுகளாக அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும். இதன் விலை 50 அமெரிக்க டாலராக அதாவது ரூ-3,690 ஆக இருக்கும். ஆய்வக இறைச்சி விற்பனையானது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  வரும்” என்றார்.Tags : world ,Singapore , For the first time in the world, meat can be eaten without cutting the goat: Singapore government permission
× RELATED வெறிச்சோடிய இறைச்சி கடைகள்