×

உலகில் முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி பைசர் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல்: அடுத்த வாரம் முதல் வழங்கப்படுகிறது

லண்டன்: கொரோனா தடுப்பு மருந்தான பைசர்-பயோன்டெக் மருந்துக்கு உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி அளித்ததை அடுத்த அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகின்றது. கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும்  பணியில் பல்வேறு நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சில மருந்துகள் தயாரிக்கப்பட்டு பல கட்ட பரிசோதனைகள் நடது வருகின்றன. இதேபோல் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக்  நிறுவனம் இணைந்து பைசர் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தன. பல கட்ட ஆய்வுகளுக்கு பின் இந்த மருந்து 95 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  கடந்த இரு தினங்களுக்கு முன், பைசர் மருந்து 100  சதவீத செயல் திறன் கொண்டது என அறிவித்த பைசர் நிறுவனம், இதன் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை இங்கிலாந்து அரசிடம் கேட்டிருப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில் பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது. சுகாதாரம் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பைசர் மருந்து பயன்பாட்டுக்கான பரிந்துரையை இங்கிலாந்து  அரசு நேற்று ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பைசருடன் இணைந்து தடுப்பு  மருந்தை உருவாக்கி ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமானது, உடனடியாக முதல் மருந்தை இங்கிலாந்துக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. பைசர் தலைவர் மற்றும் சிஇஓ ஆல்பர்ட் போர்லா கூறுகையில்,  ‘‘கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கி உள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து விரைவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என நம்புகிறோம்” என்றார்.

போலி தடுப்பூசி பற்றி உஷாரா இருக்கணும்
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) கொரோனா தடுப்பூசி குற்றவாளிகளால் குறிவைக்கப்படலாம்  என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்டர்போல் பொதுச் செயலாளர்  ஜூர்கன் ஸ்டாக் கூறுகையில், ‘‘தடுப்பூசிகளை வெளியிடுவதற்கு பல்வேறு நாடுகள் தயாராகி வருவதால், குற்றவாளிகள் மற்றும் குற்றவியல் அமைப்புகள் விநியோகச் சங்கிலிகளில் ஊடுருவ  அல்லது சீர்குலைக்க திட்டமிட்டுள்ளன.  குற்றவியல் நெட்வொர்க்குகள் போலி வலைத்தளங்கள் மற்றும் போலி மருந்துகள் மூலம் குறிவைக்கும். இது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், போலி தடுப்பூசிகளை வெளியிட்டு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கலாம்.  எனவே அனைத்து நாடுகளும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்’’ என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு இல்லை
இதற்கிடையே, பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்காது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இம்மருந்தை சேமிப்பதற்கான உயர்ரக சேமிப்பு கிடங்குகள் இல்லாததாலும், மருந்தின் விலை அதிகமாக இருக்கும்  என்பதாலும் பைசர் மருந்தின் பரிசோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : UK ,world ,Pfizer , The UK is the first country in the world to approve the use of the Fischer vaccine: issued next week
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...