×

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்க உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குச் சுதந்திரத்திற்கு முன்பு (1944-ல்) உருவாக்கப்பட்ட “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையை” நிறுத்திவிட மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்து - சமூகநீதி மீது தொடர் தாக்குதல் நடத்துவதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

76 ஆண்டுகளாகப் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தக் கல்வி உதவித் தொகை பாஜ என்ற தனியொரு கட்சியின் யாசகம் அல்ல. மத்திய அரசு வழங்க வேண்டிய அவர்களுக்கான அடிப்படை  உரிமை என்பதை  தற்போது பாஜ உணர வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகையைப் பறிப்பது என்பது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பெயரையே நீக்குவதற்குச் சமம்.

எனவே பிரதமர் மோடி மிகவும் முக்கியமான பட்டியலின பழங்குடியின மாணவர்களின் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு - இந்தப் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்குக் காலதாமதமின்றி உத்தரவிட வேண்டும்Tags : Balu , For enlisted, aboriginal students Post-Matric Scholarship should continue to be ordered: DR Balu urges PM
× RELATED ஸ்டாலினை முதல்வராக்கினால் அனைத்து பிரச்னையும் தீரும்: டிஆர்.பாலு பேச்சு