×

தொடர்ச்சியாக குறைந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 680 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சத்தை தொட்டதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், நவம்பர் 30ம்தேதி கிராமுக்கு 55 குறைந்து ஒரு கிராம் 4,519க்கும், சவரனுக்கு 440 குறைந்து ஒரு சவரன் 36,152க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு 1,832 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் காலை தங்கம் விலை திடீரென அதிகரித்தது. அதாவது கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் 4,532க்கும், சவரனுக்கு 104 அதிகரித்து ஒரு சவரன் 36,256க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. இந்நிலையில் நேற்று காலையும், மாலையும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, நேற்று காலை ஒரு கிராமுக்கு 48ம், சவரனுக்கு 384ம் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 36,592 ஆக இன்று காலை விற்பனையானது. நேற்று மாலையில் மீண்டும் விலை உயர்ந்தது. ஒரு கிராமுக்கு 85ம், சவரனுக்கு 680ம் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 36,888க்கும் விற்பனையானது.தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் திடீரென அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.Tags : At a consistently low level Gold rose 680 to the razor
× RELATED சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்