×

தங்கள் வாழ்வாதரத்திற்காக போராடும் விவசாயிகளை இதைவிட கொச்சைபடுத்த முடியாது: எல்.முருகனுக்கு கனிமொழி பதில்

திருப்பூர்: தங்கள் வாழ்வாதரத்திற்காக போராடும் விவசாயிகளை இதைவிட கொச்சைபடுத்த முடியாது என பாஜக தலைவர் எல். முருகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி; டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை எனவும், இடைத்தரகர்களும், எதிர்க்கட்சிகளும் தூண்டிவிட்டு நடத்தும் போராட்டம் என பாஜக தலைவர் முருகன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய கனிமொழி தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை பாஜக தலைவர் முருகன் அவர்கள் இதைவிட விவசாயிகளை கொச்சைப்படுத்த முடியாது. கடும் குளிரிலும், வெட்ட வெளியிலும் போராடும் விவசாயிகளை மனிதாபிமானமற்ற செயல் எனவும் கூறினார்.


Tags : Kanimozhi ,L. Murugan , Farmers fighting for their livelihoods can no longer be vilified: L. Kanimozhi's answer to Murugan
× RELATED வாழைத்தார் விலை வீழ்ச்சி: பரிதவிக்கும் விவசாயிகள்