பாஜக எம்பியும், நடிகருமான சன்னி தியோலுக்கு கொரோனா

புதுடெல்லி: பாஜக எம்பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகரும், பாஜகவின் குர்தாஸ்பூர் தொகுதி எம்பியுமான சன்னி தியோலுக்கு (64) கொரோனா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இமாச்சல பிரதேச சுகாதார செயலாளர் அமிதாப் அவஸ்தி கூறுகையில், ‘நடிகரும், எம்பியுமான சன்னி தியோல் கடந்த சில நாட்களாக ேதால்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டு குலு மாவட்டத்தில்  உள்ள மணாலிக்கு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் சன்னி தியோலின் நண்பர்கள் கூறிய தகவல்களின்படி, சன்னி தியோல் மும்பைக்கு செல்ல திட்டமிட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருடன் தொடர்புடைய சிலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்’ என்றார்.

Related Stories: