×

ஸ்ரீமுஷ்ணம் கோயில் குளத்தில் மூழ்கி தத்தளித்த அரியலூர் மாணவனை பத்திரமாக மீட்டு கரைசேர்த்த தீயணைப்பு படை வீரர்கள்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் கோயில் குளத்தில் குளித்த மாணவன் நீச்சல் தெரியாமல் தத்தளித்த நிலையில் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராகுல் (18) உள்பட 4 மாணவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள் இன்று காலை பூவராகசுவாமி கோயில்குளத்தில் இறங்கி குளித்தனர். அவர்களில் ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் தத்தளித்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜ்குமார் மற்றும் போக்குவரத்து பிரிவு புருசோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்து நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ராகுலை பத்திரமாக மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஸ்ரீமுஷ்ணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தந்தை துரிதமாக செயல்பட்டு மாணவன் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு படையினரை பொதுமக்கள் பாராட்டினர். கோயில் குளத்தில் மூழ்கி தத்தளித்த மாணவனை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Firefighters ,student ,Ariyalur ,temple pool ,Srimushnam , Firefighters rescue Ariyalur student who drowned in Srimushnam temple pool
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...