எல்லையில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லிக்குள் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

டெல்லி: விவசாயிகளின் ஒரு வார போராட்டம் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரத்து குறைந்திருப்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இதனால் டெல்லி நகருக்குள் உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சொற்ப அளவு லாரிகள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதன் எதிரொலியாக டெல்லியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் கிலோ ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கின் விலை தற்போது ரூ.50 முதல் 55 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

வெங்காயம், தக்காளி, உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. சந்தைகளில் குறைந்த அளவே இருப்பு உள்ள நிலையில் டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: