சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் கடந்த 3 முறை நடத்தியும் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர், திமுக உறுப்பினர்கள் 8 பேர் என சமநிலையில் இருந்ததால் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. 4-வது முறையாக 4-ம் தேதி நடக்க இருந்த தேர்தல் தற்போது 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் தமிழக முதல்வர் கொரோனா ஆய்வு குறித்து சிவகங்கையில் நிகழ்ச்சியில் இருப்பதும் அந்த நேரத்தில் இந்த மாவட்ட ஊராட்சி மன்ற தேர்தல் நடப்பதும் ஒரே நேரத்தில் அமைந்திருந்தது. எனவே இதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று மாவட்ட நிர்வாகம் தேர்தல் தேதியை 11-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். அதே நேரத்தில் நேற்று திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில்; சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடக்கும் அதே நாளில், தமிழக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் அமைதியாக நடக்க வாய்ப்பில்லை. எனவே ஆய்வுக் கூட்டத்தை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: