நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது..!

சென்னை: நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், ஆபாசமாக விமர்சித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுதொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர், ராஜகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், விசாரணைக்கு வந்தது. அவர்களிடம் நீதிபதிகள், முக நுாலில் அவதுாறாக பதிவிட்டால், கைது செய்கிறீர்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இப்போது நீதித்துறை பற்றி பதிவிடப்பட்டுள்ளது. நாளை வேறு யார் பற்றியும் பதிவிட்டால் என்ன செய்வீர்கள் என, கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை, சமூக வலைதளங்களில் உள்ள கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளை முடக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மத்திய குற்றப்பரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: