×

டெல்லி மாநிலத்தில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு..!

டெல்லி: கொரோனா காலத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியையொட்டி ஏற்படும் காற்று மாசு மற்றும் அதனால் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்து உள்ளது.

டெல்லியில் கொரோனா பரவலின் 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகள் மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைகிறது. பட்டாசு புகை மாசு காரணமாக மேலும் அவர்கள் பாதிப்புக்கு ஆளாகுவார்கள். கொரோனா நோயாளிகள் சந்திக்கும் இந்த பிரச்சினைகளை தவிர்க்க பட்டாசு வெடிப்பதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. டெல்லியில் தலைநகர் மற்றும் சுற்றுவட்டாரத்திலும் அனைத்து பெரிய நகரங்களிலும் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மிதமான காற்றின் தரக் குறியீடு உள்ள மாநகரங்கள், நகரங்களில் பண்டிகைகளின் போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : cities ,Delhi , Delhi, Fireworks, Ban. Extension
× RELATED தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று...