ஃபைசர் - பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்; அடுத்த வாரம் பொதுமக்களுக்கு போட ஏற்பாடு..!!

பிரிட்டன்: ஃபைசர்-பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிலையில் அடுத்த வாரம் முதல் பிரிட்டன் முழுவதும் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும். தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் இந்த நிலையில் பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர்.

இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. 10 நாட்களுக்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு பிரிட்டன் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும், 9ம் தேதிகளுக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து அடுத்த வாரம் முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

Related Stories:

>