சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660-க்கு விற்பனை: வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,293-க்கு விற்பனை..!

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.610-க்கு விற்பனை செய்யப்ப்ட் சிலிண்டர் தற்போது ரூ.660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக மத்திய அரசின் சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலை யேற்றம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் வரை ரூ.610 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.62 விலை உயர்ந்துள்ளது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பின் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>