×

பாபநாசம் கீழணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? மின் ஊழியர்கள் அச்சம்

வி.கே.புரம்: பாபநாசம் கீழணை குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை நடமாடுவதாக இணையதளத்தில் பரவும் வீடியோவால் மின்வாரிய ஊழியர்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, மிளா, மான், குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், பல அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன. சில நேரங்களில் சிறுத்தைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் போன்றவைகளை தூக்கிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பாபநாசம் கீழ் அணை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக இணைய தளத்தில் பரபரப்பு வீடியோ வலம் வருகிறது. பாபநாசம் கீழ் அணை வனப்பகுதியாக இருந்தாலும் இங்கு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளன. இங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக இணைய தளத்தில் வீடியோ வலம் வருவதால் இங்கு குடியிருந்து வரும் மின்வாரிய ஊழியர்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.

Tags : Leopard migration ,Papanasam , Leopard
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...