நகை வாங்குவோர் மத்தியில் பதட்டம்: சென்னையில் 2-வது நாளாக தங்கத்தின் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,592-க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் 2-வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி அடைந்தது. கடந்த 9ம் தேதி ரூ.39,376-ஆக இருந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.36,192-ஆக குறைந்தது. உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிந்துள்ளதால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 6 நாட்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.  சவரன் ரூ.1,392 அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு தங்கம் விலை ரூ.1,832 சரிந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று 2-வது நாளாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்ந்து 4,574-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.40-க்கு விற்கப்படுகிறது. தொடர் வீழ்ச்சிகளை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, 2-வது நாளாக உயர்ந்ததை அடுத்து நகை வாங்குவோர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>