பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது புரெவி புயல்: 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு

சென்னை: புரெவி புயல் பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என கூறியுள்ளது. இந்நிலையில் புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>