×

1 கோடி மோசடி ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது

தஞ்சை: மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்ற கணக்கில் வைத்திருந்த ரூ.1.09 கோடியை கையாடல் செய்த புகாரின் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தினகராஜா(59), 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியராக பணி புரிந்தார். இவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், ஆவணங்களை தணிக்கை செய்த போது மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நீதிபதி தங்கவேல் உத்தரவின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Tags : court employee , 1 crore fraudulent retired court employee arrested
× RELATED ரூ.1 கோடி தங்கம் கடத்தல்: வாலிபர் அதிரடி கைது