×

தங்கம் சவரனுக்கு 56 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 56 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு 55 குறைந்து ஒரு கிராம் 4,519க்கும், சவரனுக்கு 440 குறைந்து, ஒரு சவரன் 36,152க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு 1,832 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை திடீரென அதிகரித்தது. அதாவது கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் 4,532க்கும், சவரனுக்கு 104 அதிகரித்து ஒரு சவரன் 36,256க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தின விலையை விட கிராமுக்கு 7 அதிகரித்து ஒரு கிராம் 4,526க்கும், சவரனுக்கு 56 அதிகரித்து ஒரு சவரன் 36,208க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் திடீரென அதிகரித்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.Tags : Gold prices rose 56 per ounce yesterday.
× RELATED தங்கம் சவரனுக்கு ரூ.192 அதிகரிப்பு