×

பாஜவின் வேல் யாத்திரை திருச்செந்தூரில் 7ம் தேதி நிறைவு

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜவின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6ம் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடங்கியது. நிவாரண பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுவடை வீடுகளான சுவாமி மலை, பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் 5ம் தேதியன்று முருகனை தரிசித்து, 7ம் தேதி யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடக்க இருக்கிறது. யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜ பொறுப்பாளரும்,  பாஜ தேசிய பொது செயலாளருமான சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 7ம் தேதி காலை 11 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.Tags : Bajaj ,pilgrimage ,Vail ,Thiruchendur , BJP's Vail Yatra ends on 7th in Thiruchendur
× RELATED சிவகுமாரை ஒழிக்க வேண்டும் என்பதற்காக...