×

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

மைசூரு: மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா சவுகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரஜ்வல். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து  வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 24-ம் தேதி சவுகஹள்ளி அருகே பைக்கில் இவரை வழிமறித்த இரண்டு பேர் பணம் வைத்திருந்த பையை  பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது  இரண்டு பேர் பைக்கில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்துக்கொண்டிருந்தனர். இவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் சுரேஷ்,  ரமேஷ் என்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கொடுத்த தகவலின்  அடிப்படையில் 40 ஆயிரம் ரொக்கம், ஒரு டேப், திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : Two arrested in diversion case
× RELATED இருவர் டிஸ்சார்ஜ்