ஆட்டோக்களுக்கான எல்பிஜி 44.4க்கு விற்பனை

சென்னை: ஆட்டோக்களுக்கான எல்பிஜி (எரிவாயு) விலையில் கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த  மாதத்தில் ரூ.4 உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு கிலோ எல்பிஜி ரூ.44.4க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சுதந்திர வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 4.50 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சென்னையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோ ஆட்டோக்கள் உள்ளது. பெட்ரோல் விலையை போல எல்பிஜி விலையும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மாதத்தில் கிலோவுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாடகைக்கு இயங்கும் கார்களில் எல்பிஜி பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அப்போது அதிகமான கார்களில் இந்த முறை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவது குறையும்.

Related Stories:

>