×

நவம்பர் மாதம் மட்டும் மெட்ரோ ரயிலில் 8.58 லட்சம் பேர் பயணம்

சென்னை: மெட்ரோ ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் கடந்த 30ம் தேதி வரை 19,21,962 பேர் பயணித்துள்ளனர். செப். 7 முதல் 30 வரை 3,60,193 பேரும், அக்., 1ம் தேதி 31ம் தேதி வரை 7,03,223 பயணிகளும், நவ., 1 முதல் 30 வரை 8,58,546 பயணிகள் பயணித்துள்ளனர். நவம்பர் மாதத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,579 பயணிகள் பயணித்துள்ளனர். பயண அட்டை முறையில் 4,72,027 பேர் பயணித்துள்ளனர். க்யுஆர் குறியீடு பயணச்சீட்டில் நவம்பர் 11ம் தேதி முதல் 20 சதவீதம் தள்ளுபடி அளித்து வருகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவாறு மெட்ரோ ரயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags : Metro , In November alone, 8.58 lakh people traveled on the Metro
× RELATED சூரத் மெட்ரோ திட்டம், அகமதாபாத் மெட்ரோ...