பஸ் மோதி விவசாயி பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாவசை (70). விவசாயி. நேற்று முன்தினம் அம்மாவசை, தனது வயல்வெளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், அம்மாவசை மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>