×

அம்மன் கோயிலில் சிலைகள் திருட்டு

சென்னை: திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமம்  ஓஎம்ஆர் சாலையில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை பூசாரி கோயிலை திறந்து உள்ளே சென்றபோது, தனித்தனி சன்னதிகளில் இருந்த சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள சாமுண்டி, துர்கை, பிரம்மகி ஆகிய சிலைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியைடந்தார். தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Theft ,idols ,Amman ,temple , Theft of idols in Amman temple
× RELATED கோயில்களில் உற்சவ விக்ரகங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு