சீரம் தடுப்பூசி சர்ச்சையால் சோதனை நிறுத்தப்படாது: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரசெனகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சீரம் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்ட சென்னையை சேர்ந்த தன்னார்வலருக்கு மோசமான உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சீரம் நிறுவனம் மறுத்துள்ளது. தங்களின் தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது, பாதுகாப்பானது என நேற்று விளக்கம் அளித்தது.

இது குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவன இயக்குநர் பலராம் பார்கவா அளித்த பேட்டியில், ‘‘மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பாதகமான நிகழ்வு ஏற்பட்டால் அது மோசமான பாதிப்பாக கருதப்படும். அனைத்து தகவல்களை சேகரித்து, பாதகமான நிகழ்விற்கு தொடர்புள்ளதா என்பதை கண்டறிவது ஐசிஎம்ஆரின் பங்கு’’ என்றார். மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்தால் தடுப்பூசி சோதனை நிறுத்தப்படாது’’ என உறுதிபடக் கூறி உள்ளார்.

Related Stories: