ஐசிஎப் உள்ளிட்ட ரயில்வே பணிமனைகளை தனியார் மயமாக்க அறிக்கை தயாரிப்பு: ஊழியர் சங்கங்களுடன் ஏப்ரலில் பேச்சு

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஐசிஎப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய பணிமனைகளை தனியார்மயமாக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும், ரயில்வே ஊழியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனாலும், தனியார் மயமாக்கும் முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரிய தலைவரும், சிஇஓவுமான வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘ரயில்வே பணிமனைகளை தனியார்மயமாக்குவது குறித்த விரிவான திட்ட அறிக்கையில் அரசு அமைப்பான ஆர்ஐடிஇஎஸ் (ரைட்ஸ்) தயாரிக்கிறது. அப்பணி நடந்து வருகிறது. இதில், ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்வதற்கான அம்சங்கள் இடம் பெறும். இந்த அறிக்கையை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிற்சங்கங்களுடன் விவாதிக்கப்படும். இந்த ஆலோசனை 3 மாதத்திற்கு, ஜூன் வரை நடக்கும். இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>