×

காசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் காசி மீதான பலாத்கார வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி போலீசார் சென்னை விரைந்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். அவரது மகன் காசி (27). இவர் மீது நாகர்கோவில், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் போக்சோ வழக்கு, வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் காசியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள், இளம்பெண்கள், அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோரிடம் காசி பழகுவது போல் நடித்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

காசிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ேமலும் வெளிநாட்டில் உள்ள ஒரு நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய நிபந்தனை ஜாமீன் மூலம் தினேஷ் வெளியே வந்தார். முன்னதாக நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் அளித்த கந்து வட்டி புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி காசி மீது நாகர்கோவில் 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், காசி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி, சில முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காசி மீது ஒரு பலாத்கார புகாரை சிபிசிஐடி போலீசாரிடம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் காசி மீது தனியாக ஒரு பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காசி மீது தற்போது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு மற்றும் சிபிசிஐடி போலீசார் தனியாக பதிவுசெய்த பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகைகள் தயார் நிலையில் உள்ளன.

இந்த வழக்குகளில் ேமலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்ெபக்டர் சாந்தி தலைமையிலான குழு சென்னை சென்றுள்ளது. அங்கு இரு குற்றப்பத்திரிகைகளும் இறுதி வடிவம் பெறுகின்றன. அந்த பணிகள் முடிந்தவுடன் அடுத்த வாரம் இந்த 2 குற்றப்பத்திரிகைகளும் நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்யப்படும் என சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.Tags : CBCID ,Chennai ,Kasi , CBCID police rushed to Chennai to gather evidence in Kasi case
× RELATED இளம்பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில்...