×

2020-21-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தினை செயல்படுத்த 25 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமுதாய சொத்துக்களை திட்டமிட்டு உருவாக்குவதற்கும், நிதியளிப்பதற்கும் அவற்றின் நிலைப்பு  தன்மைகளை  உறிதி  செய்வதற்கும்  பொதுமக்களின்  பங்கேற்பு  அவசியமானதாகும். பொதுமக்களின் சுயசார்பு தன்மையை ஊக்குவிப்பதற்கும். மேன்மைப்படுத்துவதற்கும், சமுதாய உட்கட்டமைப்பு  வசதிகளை  உருவாக்கி  பராமரிப்பதில் அவர்களின்  பங்களிப்பை  அதிகரித்து அதன்மூலம் தன்னிறைவு பெறச் செய்யவும் அரசு தன்னிறைவு திட்டத்தினை 2011-12ம் ஆண்டு முதல் செயல்படுத்துகிறது.

இந்த  வகையான  பொதுமக்கள்  பங்கேற்பு  அணுகுமுறையுடன்  மொதுமக்கள்  பங்கேற்பு மற்றும்  அரசு  நிதி  உதவியுடன்  பணிகள்  மேற்கொள்ளப்படுவதால்  சமுதாயத்தின்  தேவைகள் தன்னிறைவு அடைவதற்கு வழிவகை செய்கிறது. 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் 2020-21-ம் ஆண்டிற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags : Government ,Government of Tamil Nadu , Rs 25 crore allocation for self-sufficiency scheme in 2020-21: Government of Tamil Nadu releases funds
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...