×

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீது உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிலருக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால் வருடத்திற்கு 5 லட்சத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் சில மாணவர்கள் மருத்துவ இடங்களை தேர்வு செய்யவில்லை. அரசு இதை முன்னதாகவே அறிவித்திருந்தால் நாங்கள் அந்த இடங்களை தேர்வு செய்திருப்போம், எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் இடங்கள், காலியாக இருக்கும் இடங்கள் ஆகியவற்றை நிரப்பும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக தவறவிட்ட மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : consultation ,branch ,Madurai ,Government of Tamil Nadu , 7.5 per cent, in reservation, priority for students who have missed the consultation
× RELATED முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக...