நமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி : எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய அரசால் 1965ம் ஆண்டு டிசம்பர் 1-ல்உருவாக்கப்பட்டது. இந்திய சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பதில் இப்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளதாவது:“எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துகள். இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின் போது, நமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றனர்.. தேசத்தைப் பாதுகாப்பதற்கும், இயற்கைப் பேரழிவுகளின்போது மக்களுக்கு உதவுவதற்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதி பூண்டுள்ளனர். அவர்கள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: