12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது தாழ்வு மண்டலம்; இலங்கையை கடந்த பிறகு டிச.4-ம் தேதி குமரி-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்

டெல்லி: வங்கக் கடலில் உருவாகும் புயல் டிச.4ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலைத்தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறுகிறது. இந்நிலையில் இந்த புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது. இலங்கை திருகோணமலையில் இருந்து 460 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகும் புயல் டிச.4ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும். டிச.2ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும்.

புயல் கரையை கடக்கும் போது 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் கூறியுள்ளது. இதனிடையே இந்தப்புயலால், தென் தமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் நாளை புயல் கரையைக் கடக்க இருப்பாதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories:

>