×

பல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்: வழக்கு நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும்

* ஆன்லைனிலோ அல்லது ஆப்-லைனிலோ அரியர் தேர்வுகளை நடத்தலாம்
* வழக்குகள் நேரடி விசாரணை ஜனவரி 11-ம் தேதி ஒத்திவைப்பு

சென்னை: பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சென்னை பல்கலை கழகம் மற்றும் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் அரியர் தேர்வுகளை வெளியிட்டது. வழக்கு விசாரணையை சிலர் சட்டவிரோதமாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டதற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

 யூடியூபில் வெளியிட்டவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். அரியர் தேர்வு வழக்கை நேரடி விசாரணையாக மட்டுமே நடத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்தள்ளது. அரி்யர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதை எதிர்த்து ராம்குமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற செமஸ்டர் தேர்வுகளை எல்லாம் தமிழக அரசு ரத்து செய்திருந்தது.

அதேபோல, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அரியர் தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளின் விசாரணையின்போது, ‘இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடைய செய்ய முடியாது என்றும், அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்கலைக் கழகங்கள் விரும்பினால் அரியர் தேர்வுகளை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் விருப்பினால் ஆன்லைனிலோ அல்லது ஆப்-லைனிலோ அரியர் தேர்வுகளை நடத்தலாம் எனவும் கூறியுள்ளது. மேலும் அரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் நேரடி விசாரணைக்கு ஜனவரி 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Chennai High Court ,stay ,universities ,Aryan , University, Aryan Examination, Results, Interim Prohibition, High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...