×

சித்தா மருத்துவ பிரிவு சார்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் ஆயுஷ் மருத்துவ முகாம்

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள இந்திய மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் இயங்கும் யோகா- இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையம் மற்றும் சித்தா மருத்துவ பிரிவு சார்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் ஆயுஸ் மருத்துவம் முகாம் நடந்தது. முகாமில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும் காரணிகள், உணவு, உடற்பயிற்சி, உறக்கம் குறித்த முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த காரணிகளை ஆயுஸ் மருத்துவ முறையில் சமப்படுத்தும் முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகிய மூன்று காரணிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகை உணவுகள், யோகா உடற்பயிற்சி, யோகா உடல் தளர்வு பயிற்சி, தியான பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ரமேஷ், மருத்துவர் கண்மணி, மருத்துவ அலுவலர் மருத்துவர் முருகன், யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்துக்குமார், சித்தா மருத்துவ அலுவலர் மருத்துவர் பொன்மொழி பங்கேற்று பேசினர். மேலுமு் மருத்துவமனை செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.
முடிவில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் பவுடர், மூலிகை தேநீர், சுண்டல் வழங்கப்பட்டது.

Tags : AYUSH Medical Camp ,Siddha Medical Division , Siddha Medical Division
× RELATED திமுக சார்பில் இலவச மரக்கன்று வினியோகம்