×

தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டதால், நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கான இ-பதிவு நடைமுறை தொடரும்: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கான இ-பதிவு நடைமுறை தொடரும் என மவாட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்கெனவே பொதுப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும், தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார். இதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார். எனவே விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறினார். நெறிமுறைகள் கிடைத்தப்பின் அதற்கேற்ப அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். நீலகிரி மாவட்டம் அதிகமான சுற்றுலாப் பகுதிகளை கொண்டுள்ளதால் அதிகபடியான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என கூறினார். எனவே அரசு தெரிவித்துள்ளபடி மாவட்டத்திற்குள் நுழைவதற்கு முறையாக இ-பதிவு செய்த பின்னர் தான் வர வேண்டும் என கூறினார்.

இ-பதிவு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் முகக்கவசம் அணிந்து அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே சற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிபாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருவதை தவிர்ப்பது நல்லது எனவும் கூறினார்.


Tags : District Collector ,Nilgiris , Nilgiris, Tourists, e-Registration, Continuing, Collector
× RELATED பக்தர்களுக்கு செயல்முறை விளக்கம்